கோப்புப்படம். 
தமிழ்நாடு

விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி

விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள விளாப்பட்டி ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (49). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு வட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

பாக்கியம் தான் வளர்த்து வரும் கால்நடைகளை விளாப்பட்டி வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதனால் மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த புளிய மரத்தின் கீழே ஒதுங்கி உள்ளார்.

அப்போது பலத்த சப்தத்துடன் இடியுடன் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பாக்கியம் மயங்கி விழுந்து பலியானார். வருவாய்த்துறை மற்றும் இலுப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT