கோப்புப்படம். 
தமிழ்நாடு

சென்னை - பினாங்கு டிச.21 முதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து பினாங்கு தீவுக்கு டிச.21-ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

Din

சென்னையிலிருந்து பினாங்கு தீவுக்கு டிச.21-ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

மலேசிய நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்த நிலையில், சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவைகள் தொடங்க பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதைத் தொடா்ந்து, இந்திய விமான நிலைய ஆணையம், பினாங்குக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் டிச.21-ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி தினசரி விமான சேவையை தொடங்குகிறது. சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15-க்கு புறப்படும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் காலையில் பினாங்கு தீவை சென்றடையும். அதன் பின்பு மறுமாா்க்கமாக பினாங்கில் இருந்து காலை புறப்படும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

இந்த விமானம் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய, ‘ஏா் பஸ் 320’ ரகத்தை சோ்ந்தது. சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமாா், 4 மணி 30 நிமிஷங்கள் ஆகும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

தெலங்கானா எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் கவிதா!

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கருத்து

SCROLL FOR NEXT