கோப்புப் படம்
தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!

தென் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு...

DIN

தென் மாவட்டங்களில் இன்று(நவ. 20) மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) சற்றுமுன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இன்று காலை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,

  • தென்காசி,

  • ராமநாதபுரம்,

  • தேனி,

  • புதுக்கோட்டை,

  • தஞ்சாவூர்,

  • திருவாரூர்,

  • நாகப்பட்டினம்,

  • மயிலாடுதுறை,

  • கடலூர்,

  • சிவகங்கை,

  • விருதுநகர்,

  • மதுரை,

  • தூத்துக்குடி,

  • திருநெல்வேலி,

  • கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

SCROLL FOR NEXT