வெள்ளத்தில் மிதக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் 
தமிழ்நாடு

குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்!

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ பார்வையிடவோ தடை..

DIN

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங்கள் கோயிலின் வெளிப்பகுதியில் வைத்து நடைபெற்றது. மேலும் கோயிலின் மூலஸ்தான பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை நீடித்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றாத நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சிற்றோடைகள் கால்வாய்கள் மற்றும் காற்றாற்று வெள்ளம் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் நேற்று மாலை முதல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

கல் மண்டபத்தை ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்

இன்று காலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இரண்டு கறைகளையும் தொட்டுச் செல்கிறது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலையும் வெள்ளநீர் சூழ்ந்து செல்கிறது கல் மண்டபத்தை பாதி மூழ்கிய நிலையில் வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்கிறது இதன் காரணமாக கோயிலின் மூலஸ்தானத்திற்குள்ளும் தண்ணீர் செல்வதால் அந்தப் பகுதியில் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று திருமண நாள் என்பதால் குறுக்குத்துறை முருகன் கோயிலில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்க இருந்த நிலையில் மூலஸ்தான பகுதிக்குள் தண்ணீர் சென்றதால் கோயிலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள உற்சவர் முன்பாக திருமண நிகழ்வுகள் நடைபெற்றது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ பார்வையிடவோ செல்ல வேண்டாம் என்றும் கால்நடைகளை ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT