தமிழ்நாடு

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய எம்ஜிஆர்

DIN

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவரும் எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த வி. என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா இன்று(நவ. 24) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறாா். நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவா் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுவாரசியப் பகுதியாக, ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் (ஏ.ஐ.) என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குரல் ஒலித்தது. இதனைக் கேட்ட அதிமுகவினர் உற்சாகமடைந்ததைக் காண முடிந்தது. அதில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர் பாராட்டி பேசியுள்ளார்.

முன்னதாக, அதிமுக ஜானகி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுனோ மென்டிஸ் அசத்தல்: 90-ஆவது நிமிஷத்தில் கோல்! பார்சிலோனாவை வென்ற பிஎஸ்ஜி!

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

SCROLL FOR NEXT