கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் சின்னம்

வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது தமிழக கரையை நோக்கி நகர்வதால், திங்கள்கிழமை நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதனிடயே கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களி லும், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) முதல் நவ. 29-ஆம் தேதி வரை மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT