புயல் எச்சரிக்கை 
தமிழ்நாடு

9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை!

தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில்..

DIN

சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்றுள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை(நவ.25) காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுதத தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும்.

நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி உள்பட ஒன்பது துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

SCROLL FOR NEXT