கோப்புப் படம் 
தமிழ்நாடு

கனமழை: அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலை.,யில் நாளை (நவ.27) நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

DIN

கனமழை எச்சரிக்கையால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நாளை (நவ.27) நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 130 க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நாளை (நவ.27) நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கு மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை தங்கள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேபோன்று, கனமழை எச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இம்மாதமே பெறலாம்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

இங்கிலாந்து திணறல் (79/7): பாகிஸ்தானின் முதல் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் மழை!

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

SCROLL FOR NEXT