தமிழ்நாடு

புயல் உருவாவதில் தாமதம்..!

புயல் உருவாவதில் தாமதம்.. புயலாக மாறினால் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும்?

DIN

புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் உருவானாலும் அதிதீவிரமாக இருக்காது எனவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை முதல் டெல்டா பகுதி வரை நாளை (நவ. 28) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தப் புயலுக்கு ஃபெங்கல் எனவும் பெயரிடப்பட்டது.

இதனையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் (தமிழ்நாடு வெதர்மேன்) பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளதாவது,

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறைந்த அளவிலான சுழற்சியுடன் வேகமாக முன்னேறி வருகிறது.

எனினும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக புயல் தீவிரமடைவதில் தாமதமாகலாம். ஆனால் தற்போது சற்று தீவிரமடைந்துள்ளது. வட தமிழக கடற்கரையையொட்டி தற்போது நிலைக்கொண்டிருந்தாலும், இது மேலும் தீவிரமடைவது குறையும். இது புயலாக மாறினாலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தையொத்த தீவிரம் கொண்டதாகவே இருக்கும்.

சென்னை முதல் டெல்டா பகுதி வரை மிதமான மழைக்கு நாளை (நவ. 28) வாய்ப்புள்ளது. நவ. 29 முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: சிபிஐ விசாரணையை வரவேற்கிறோம்

புதுவை காவல் துறை பயன்பாட்டுக்கு ரூ.8.5 கோடியில் புதிய வாகனங்கள்

மரியா ஹோமியோபதி கல்லூரி மாணவருக்கு விருது

மேலச்செவலில் புதிய காவல் நிலையம்!

மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT