இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு படம் | எக்ஸ்
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 29 ஆம் தேதி காலை வரை ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, 29 ஆம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி காலை, காற்றின் வேகத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே, வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் 65 கிமீ வேகத்தில் வீசும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT