தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!

புயல் சின்னத்தின் தீவிரத்தன்மை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவு..

DIN

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பகலுக்கு மேல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

எனினும் வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“புயல் சின்னம் மீண்டும் வலுவடையவுள்ளது. புயலாக அறிவிப்பதற்கு 35 க்நாட்ஸ் வரை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் எட்ட வேண்டிய நிலையில், 30 க்நாட்ஸை நெருங்கியுள்ளது. 40 முதல் 45 க்நாட்ஸ் வரை வலுவடைய வாய்ப்புள்ளது.

தீவிர மேகக் கூட்டங்கள் உருவாக்கக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் இன்று பகலுக்கு மேல் மாலை, இரவு எனப் படிப்படியாக மழையின் தீவிரத்தன்மை அதிகரிக்கும்.

இன்றும் நாளையும் மிக கனமழை முதல் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை(நவ.30) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது: பிரதமா் மோடி

மீனவா் பிரச்னையை இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

‘தீ’வினை அச்சம்!

தமிழகம் - இத்தாலி இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம்: ஜொ்மனியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கடைகள் மற்றும் நிறுவன பணியாளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவு

SCROLL FOR NEXT