முகப்பு
தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புயல் எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கான நவ. 30 விடுமுறை விவரம்

Updated On : 30 நவம்பர் 2024, 6:34 am IST
கனமழை - கோப்புப்படம்.
பகிர்:

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 30 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.

புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.30 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்....

  • சென்னை

  • திருவள்ளூர்

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • விழுப்புரம்

  • மயிலாடுதுறை

  • கடலூர்

  • கள்ளக்குறிச்சி

  • ராணிப்பேட்டை

  • கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments