வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மையம் மேலும் கூறியிருப்பதாவது, மரக்காணம் அருகே கரையைக் கடக்க தொடங்கிய ஃபென்ஜால் புயலால் பலத்த காற்று வீசி வருகிறது.
தரையைத் தொட்டத்தில் இருந்து 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் வட தமிழகத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றம், கொந்தளிப்பு நாளை மாலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே புதுவையில் இருந்து 60 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
அதேசமயம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.