பருவ மழையை எதிர்கொள்வதற்காக சொந்தமாக 36 படகுகள் வாங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், 80 படகுகள் மீனவர்களிடம் இருந்து வாடகைக்கு எடுக்ககப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைந்த முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
36 படகுகள்
பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 சிறிய வகை படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளது.
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.