பறக்கும் ரயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
விடுமுறை நாளில் பறக்கும் ரயில் சேவையை வழக்கமாக 55 ஆயிரம் பேர் பேர் பயன்படுத்தும் நிலையில், இன்று மாலை வரை 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த ஒரு வாரமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று (அக்.6) இறுதி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
இதனைக் காண அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகளில் பலர் பயணித்து மெரீனாவுக்குச் சென்றனர். மேலும் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் பலர் திரண்டதால் 5 கி.மீட்டருக்கு முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து மாற்றம் செய்த பின்னரும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
விமான சாகசத்தையொட்டி இன்று 4.30 மணி வரை 3 லட்சம் பேர் ரயிலில் பயணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. விடுமுறை நாளில் பறக்கும் ரயில் சேவையை வழக்கமாக 55 ஆயிரம் பேர் பேர் மட்டுமே பறக்கும் ரயிலில் பயணிப்பார்கள் எனவும் தெற்கு ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க | புதிய சாதனை படைத்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.