தமிழ்நாடு

இலுப்பூரில் மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி!

இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

DIN

இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று(அக். 5) இரவு, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் அமமுக இலுப்பூர் நகரச் செயலர் வீட்டில் வளர்க்கப்பட்ட 7 ஆடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அடுத்துள்ள ராப்பூசலை சேரந்தவர் அமமுக இலுப்பூர் நகர செயலரான விவசாயி பாஸ்கர். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர், வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இவர் வளர்த்து வந்த ஆடுகளை வழக்கம் போல நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கிடயில் அடைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு ராப்பூசல் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ஆடுகள் மீது இடி தாக்கியதில், கிடயில் இருந்த 8 ஆடுகளில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, கால்நடை மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT