விமானப் படை சாகச நிகழ்ச்சியில் கூடிய மக்கள் கூட்டம். பிடிஐ
தமிழ்நாடு

விமானப் படை சாகச நிகழ்ச்சி: 30 பேர் மயக்கம்; 5 பேர் பலி!

மெரீனாவில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மயக்கம்

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் படை சாகசம்

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த ஒரு வாரமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று (அக்.6) இறுதி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

சென்னை மெரீனாவில் 4 லட்சம் மக்களும், மெரீனா சாலைகள், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் போன்ற இடங்களில் 6 லட்சம் பேரும் விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

இதனால், மெரீனாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியானது, அதிக எண்ணிக்கையிலான மக்கள் நேரில் பார்த்த ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதையும் படிக்க | புதிய சாதனை படைத்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி!

கடும் வெயிலால் மயக்கம்

விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண காலை முதலே மக்கள் மெரீனாவில் கூடத் தொடங்கினர். காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், போகப்போக வெயில் அதிகரித்தது.

பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றதால், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதியுற்றனர். மயக்கம் அடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!

மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56) உயிரிழந்தார்.

வான் வழி சாகச நிகழ்ச்சி காண வந்த 5 நபர்கள் உயிரிழப்பு

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56)

குரோம்பேட்டை சேர்ந்த சீனிவாசன் (48)

திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (35)

ராயப்பேட்டை மருத்துவமனையில் தினேஷ் (37)

55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளார்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48) இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கும் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே, இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளுடன் மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகச நிகழ்ச்சி பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறுத்திவிட்டு இங்கிருந்து நடந்தே சென்று இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும்போது வெயிலின் தாக்கத்தின் காரணமாக கடற்கரையில் இருந்து வரும் வழியில் மயக்கம் அடைந்து கீழே விழுந்து இருக்கிறார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்றுதான் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்பொழுது வாகனத்தை நிறுத்தி திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்துள்ளார்.

உடனடியாக அவருடைய மனைவி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த பொழுது கார்த்திகேயன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தினேஷ் (37) இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சி காண வந்த பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர் சிகிச்சை பலனின்றி இவர் தற்பொழுது உயிரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56) கூட்ட நெரிசலில் கடற்கரை மணல் பரப்பில் மயங்கி விழுந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர்

55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று காலை பார்த்தசாரதி ஆர்ச் வழியாக நின்று கொண்டு வான்வழி சாகசங்களை கண்டு களித்துள்ளார்.

அப்பொழுது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்து விடுகிறார் அவருடைய உடையில் எந்த விதமான அடையாள அட்டையும் இல்லாத காரணத்தினால் போலீசார் அடையாளம் தெரியாத நபர் என தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

SCROLL FOR NEXT