வைகோவும் அழைப்பிதழும் FB
தமிழ்நாடு

வைரலாகும் வைகோ இல்லத் திருமண அழைப்பிதழ்! உண்மையா? போலியா?

இறைவன் துணையுடன் அழைப்பிதழில் லக்னம், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிட்டுள்ளதால், பலர் விமர்சித்து வருகின்றனர்.

DIN

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குலம், கோத்திரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வைணவ முறைப்படி வைகோவின் பெயரில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதால், இணையத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத்தைப் பின்பற்றி வருபவர். இவரின் மகன் துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

துரை வைகோ மகள், அதாவது வைகோவின் பேத்தியின் திருமண அழைப்பிதழ் என ஒன்று பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வைணவ முறைப்படி அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி இருவீட்டாரின் குலம், கோத்திரம், நட்சத்திரம், நாள், நல்லநேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியில் ஒருவராக அறியப்படும் வைகோ, தனது பேத்தி திருமணத்துக்கு மட்டும் ஏன் இவ்வாறு அழைப்பிதழ் அச்சடித்துள்ளார்? என இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வைகோ மற்றும் துரை வைகோவை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!

இந்த அழைப்பிதழ் உண்மையில் வைகோ இல்லத் திருமண விழாவுக்கான அழைப்பிதழா? அல்லது போலியானதா? என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

9 நாடுகளுக்கு சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்! ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி! இந்தியர் நிலை என்ன?

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

SCROLL FOR NEXT