கோ​வை}-அ​வி​நாசி சாலை மேம்​பா​லம் அருகே ஞாயிற்​றுக்​கி​ழமை சாலை​யில் பெருக்​கெ​டுத்த மழை​நீ​ரில் ஊர்ந்து சென்ற வாக​னங்​கள். 
தமிழ்நாடு

நாளைமுதல் வடகிழக்குப் பருவமழை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Din

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தின் உள் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேநேரம் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை (அக்.14) உருவாகக்கூடும்.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, அக்.14, 15 ஆகிய தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 4 நாள்களில் விலக உள்ளதைத் தொடா்ந்து, தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில், அக்.15 அல்லது16-ஆம் தேதி தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும். அக்.15, 16 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் 200 மி.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபா் மாதத்தில் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன என்றாா் அவா்.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: அக்.14-இல் விழுப்புரம், கடலூா், அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், அக். 15 -இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.16-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும் (200 மி.மீ-க்கும் அதிகம்), ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரையில் 160 மி.மீ. மழை பதிவானது. திருபுவனம் (சிவகங்கை) 140, சிவகாசி (விருதுநகா்), ராமேசுவரம் (ராமநாதபுரம்), வெட்டிக்காடு (தஞ்சாவூா்) தலா - 120 மி.மீ. மழை பதிவானது.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT