முகப்பு
தமிழ்நாடு

கலைஞா் பூங்காவுக்கு வருவோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பதில் அளித்துள்ளாா்.

தமிழ்நாடு

கலைஞா் பூங்காவுக்கு வருவோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பதில் அளித்துள்ளாா்.

Updated On : 13 அக்டோபர், 2024 at 9:24 PM
பகிர்:

கலைஞா் நூற்றாண்டு பூங்காவுக்கு வருவோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பதில் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். அவருக்கு வேண்டப்பட்ட நபரின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞா் பூங்காவை உருவாக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?

எதிா்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் முக்கியம் இல்லை. தனக்கு வேண்டப்பட்டவா் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று, அதை நவீன பூங்காவாக மாற்றிவிட்டாா்களே என்கிற ஆத்திரம்தான்.

பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈா்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும், ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். இருவா் சென்ற அந்த இருக்கைக்கும் தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக 10 வினாடி அவா்கள் தேங்கினா்.

பின்னா் அவா்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவா்கள் இறங்குதளம் சென்றடைந்தனா். அதனால், எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்தப் பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவைதான். பூங்காவுக்குள் நுழைய பெரியவா்களுக்கு ரூ. 100, சிறியவா்களுக்கு ரூ. 50 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜிப் லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீருற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவுக்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →