உதயநிதி 
தமிழ்நாடு

300 நிவாரண முகாம்கள், 130 படகுகள், 2 சுரங்கப் பாதைகள் மூடல்: உதயநிதி ஸ்டாலின்

300 நிவாரண முகாம்கள், 130 படகுகள், 2 சுரங்கப் பாதைகள் மூடல்: உதயநிதி ஸ்டாலின்

DIN

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை நிலவரம் மற்றும் முன்னேற்பாடு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்து வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சென்னையில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் இரண்டு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தற்போதைக்கு சென்னையில் மட்டும் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கனமழை பெய்தாலும் மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வருகிறோம். சென்னையில் 89 படகு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 130 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மழை மற்றும் வெள்ளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். திருவள்ளூரில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT