பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ள குறுஞ்செய்தி எச்சரிக்கை 
தமிழ்நாடு

அதிக கனமழை: பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எச்சரிக்கை.

DIN

அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரித்துள்ளது.

பருவமழை தொடங்கியதையொட்டி தொடர் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அதிகனமழை எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னையில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க | கனமழை: தேமுதிக அலுவலகத்தை மக்கள் பயன்படுத்தலாம்!

இதனிடையே இன்று பிற்கலம் முதல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

SCROLL FOR NEXT