கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் இன்று வெயில் சுட்டெரிக்கும்! மாலை மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிக்கான இன்றைய வானிலை நிலவரம் பற்றி...

DIN

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் வெயில் உச்சத்தை தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தெற்கு ஆந்திரம் அருகே கரையைக் கடந்தது.

இதனால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு பெரிய அளவிலான மழை பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றைய வானிலை நிலவரத்தை பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“நேற்று பிற்பகலில் இருந்து ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை. மேகக் கூட்டங்கள் இல்லாத தாழ்வுப் பகுதி நெல்லூர் பகுதியை அடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் கடந்து கொண்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பகலில் வெயில் உச்சத்தை தொடும். காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நிலப் பகுதிகளில் நகர்ந்து கொண்டிருப்பதால் தற்காலிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனத்தை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்யக் கூடும்.

சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் இன்றிரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய சாதாரண மழை பெய்யக் கூடும். சில இடங்களில் பெய்யாமலும் போகலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/praddy06/status/1846724377842213287

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT