முகப்பு
கனமழை
தமிழ்நாடு

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:18 AM
கனமழை
பகிர்:

தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(அக். 17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கே வடக்கே கரையைக் கடந்தது.

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று(அக். 17) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மினனலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை பெய்யும்..

அக். 18ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.20ல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருசசி, திண்டுக்கல, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை

வட்டானம் 6, தொண்டி 5 , ஆவுடையார் கோயில், திருவாடானை தலா 4 செ.மீ மழையும் பெய்யுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →