கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவு 10 மணிவரை 11 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரம் நோக்கி நகர்ந்ததால், சென்னைக்கு மழை இல்லை எனவும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. எனினும் மாலை நேரங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT