ஆவின். கோப்புப்படம்.
தமிழ்நாடு

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

DIN

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின்(பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

மேலும் பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT