கோப்புப் படம்  
தமிழ்நாடு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) தொடங்குகிறது.

Din

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) தொடங்குகிறது.

முதல் நாளில் சிறப்பு பிரிவினா் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம்-ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல 30 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

மீதமுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

இந்நிலையில், சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுா் வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியூஎம்எஸ்), ஹோமியோபதி (பிஹெச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான 2024-25-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அப்படிப்புகளுக்கான கலந்தாய்வு அக். 17-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு அக். 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய சிறப்பு பிரிவினா் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சிறப்பு பிரிவில் 15 இடங்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 97 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT