மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு விழாவில் புகழஞ்சலி...
மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை(அக்.21) நடைபெற்றது. முரசொலி செல்வத்தின் திருவுருவப் படத்தை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசும்போது, “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறக்கட்டளையில், திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திராவிட இயக்க படைப்புகள், படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். திமுக முப்பெரும் விழாவின்போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.