கனமழை 
தமிழ்நாடு

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

DIN

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரிந்து இன்று காலை 5.30 மணியளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் ஒரிசா தென்கிழக்கே 700 கி.மீ தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு மேற்கு வங்காளம் தெற்கு-தென்கிழக்கே 700 கி.மீ தொலைவிலும் கேப்புப்பாராவிற்கு தெற்கு-தென்கிழக்கு 730 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அக். 23-ம் தேதி புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 24-ல் காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும்.

இது வடக்கு ஒரிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24-ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை..

இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.23ல் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT