நெருங்கும் தீபாவளி: ஆடுகள் விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தைகளில், அமோகமாக விற்பனையாகும் ஆடுகள்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தைகளில், அமோகமாக விற்பனையாகும் ஆடுகள். ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை வளாகத்தில், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு இடங்களில் இருந்த நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
அருகில் உள்ள பொன்னேரி, ஏலகிரிமலை, நாட்றம்பள்ளி, மண்டலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்க குவிந்தனர்.
ஒரு ஆடு, அதன் எடைக்கும், ரகத்துக்கும் ஏற்ப 3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. இதில் ஏராளமான வியாபாரிகள் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
பொதுவாகவே, தீபாவளியன்று மக்கள் அசைவ உணவுகளை அதிகம் விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக ஆட்டுக்கறி அதிகளவில் விற்பனையாவது தீபாவளியன்றுதான் என்பதால், கறிக்கடைக்காரர்களும், வியாபாரிகளும் ஆடுகளை ரகத்துக்கு ஏற்ப வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.