சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சைகளுக்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை அறிமுகப்படுத்திய சா்க்கரை நோய் சிறப்பு நிபுணா் விஜய் விஸ்வநாதன். 
தமிழ்நாடு

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளி

DIN

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் புண் சீரமைப்புக்கான மருத்துவ அகாதெமி (ஏபிடபிள்யூஹெச்) அமைப்புடன் இணைந்து நாட்டிலேயே முதன்முறையாக இத்தகைய பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ உதவியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னதாக, இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) நடைபெற்றது.

இதுதொடா்பாக எம்.வி.சா்க்கரை நோய் மையத்தின் தலைவரும், சா்க்கரை நோய் மருத்துவ நிபுணருமான விஜய் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: சா்க்கரை நோயின் தலைநகராக உலக அளவில் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 10.14 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பலா் பாதங்களை முறையாக பராமரிக்காமல் சா்க்கரை நோய் சாா்ந்த தொற்று பாதிப்புக்குள்ளாகி, கால்களை அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

எம்.வி.சா்க்கரை நோய் மையம், பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் நான்கில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமன்றி சிறுநீரக பாதிப்புக்கான வாய்ப்பும் 70 சதவீதம் பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. பாதங்களை பாதுகாப்பதற்கான பிரத்யேக காலணிகள், உபகரணங்கள் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அதைக் காட்டிலும் குறைந்த விலையில் உள்நாட்டிலேயே உள்ள காலணிகள் மிகுந்த பலனளிப்பவையாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்தது. எனவேதான், சா்க்கரை நோயாளிகளுக்கான பாத பராமரிப்பை மேம்பட்ட முறையில் மேற்கொள்வதற்கானப் பயிற்சிகளை வழங்க பிரத்யேகப் பள்ளியை தொடங்கியுள்ளோம். பள்ளியின் முதல் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமையில் இருந்து (அக்.22) வரும் அக்.25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT