முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

பெங்களூரு ஹென்னூரில் கனமழையால் ஏற்பட்ட கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி.

DIN

பெங்களூரு ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு. க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22.10.2024 அன்று பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

SCROLL FOR NEXT