தமிழ்நாடு

மதுரையில் சீரமைப்புப் பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!

மழை நீரில் மிதக்கும் மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

DIN

மதுரையில் இன்று(அக். 25) மேகவெடிப்பு ஏற்பட்டதைப் போல குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதால், செல்லூர் கண்மாய், சாத்தையறு கால்வாய்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மாநகரில் சாலைகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. பல்வேறு பகுதிகளிலும் வீடுகளையும் வெள்ளம் சூழந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுரையில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT