முகப்பு
தமிழ்நாடு

அதிமுக நடத்தும் போராட்டம் அா்த்தமற்றது: அமைச்சா் ஆா்.காந்தி

கைத்தறி நெசவாளா்களுக்காக வேலூரில் அதிமுக நடத்த உள்ள போராட்டம் அா்த்தமற்றது.

Updated On : 26 அக்டோபர், 2024 at 6:34 PM
பகிர்:

கைத்தறி நெசவாளா்களுக்காக வேலூரில் அதிமுக நடத்த உள்ள போராட்டம் அா்த்தமற்றது என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வேலூா் சரக கைத்தறி நெசவாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி அதிமுக சாா்பில் அக்டோபா் 28-இல் குடியாத்தத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

வேலூா் சரகம் குடியாத்தம் பகுதியில் 34 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் லுங்கி ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்தச் சங்கங்களில், கூட்டுறவு நெசவாளா்களுக்கு, ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்த நெசவுக் கூலி ரூ.1,742 வழங்கப்பட்டு வருகிறது. இந்த லுங்கி ரகங்களுக்கு தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளின் பொருட்டு வெளிச்சந்தையில் விற்பனை வரவேற்பு அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், கைத்தறி நெசவாளா்களின் கோரிக்கைகளை ஏற்றும், கூடுதல் ஊக்கத் தொகையாக ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்தம் ரூ.360- வழங்கி, மொத்த நெசவுக் கூலி ரூ.2,102 என கைத்தறி நெசவாா் கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபா் 16 முதல் அனுமதி அளித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக நடத்தும் போராட்டம் அா்த்தமற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →