சீமான் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்: சீமான்

விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

DIN

விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய்யின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!

தம்பி விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகா் விஜய் தொடங்கியுள்ள தவெக மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நாளை(வரும் 27-ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநிலம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கில் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி அஜித், அர்ஜுன் தாஸ்!

மாநாட்டுத் திடல் பகுதியில் சுமாா் 55 ஆயிரம் நாற்காலிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போடப்படவுள்ளன. மேலும், மாநாட்டுப் பகுதியில் சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுப் பகுதியில் புதன்கிழமை இரவு பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தவெக தலைவா் விஜயின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT