உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சென்னையில் இரண்டரை ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

Din

சென்னை தண்டையாா்பேட்டை நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அவற்றை 8 வார காலத்துக்குள் அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூயமூா்த்தி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தப் பகுதியில் 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளன. சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் புதிதாக குடியிருப்புகள் கட்ட திட்டமிட்ட போதும், அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்து வருவதால், அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் விரைவில் அகற்றப்படும்’ என தெரிவித்திருந்தாா்.

நீதிபதிகள் அதிருப்தி: இந்த அறிக்கையை படித்துப் பாா்த்த நீதிபதிகள், 2022-ஆம் ஆண்டே 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளதாகக் கூறியபோதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவற்றை அகற்றாதது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், அந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அவா்களின் கடமை தவறிய செயலை மட்டுமல்ல, அலட்சியப்போக்கையும் காட்டுகிறது”என அதிருப்தி தெரிவித்தனா்.

இந்த 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களையும் 8 வார காலத்துக்குள் அகற்ற வேண்டும்”என தமிழக அரசுக்கும், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT