விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் 
தமிழ்நாடு

தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றபோது நேரிட்ட விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி.

DIN

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் தொண்டர்கள், ரசிகர்கள் வி. சாலை பகுதிக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

விபத்தில் இளைஞர் பலி

இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக, விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றதாகவும், இரு இளைஞர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | தவெக மாநாடு: வெய்யிலையும் பொருட்படுத்தாது குவியும் தொண்டர்கள்!

மாநாட்டிற்குச் சென்ற வேன் விபத்து

சென்னை நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT