டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வை 16 லட்சம் போ் எழுதினா். தோ்வு நடைபெற்று 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.