அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
தமிழ்நாடு

பாஜகவின் 'சி' டீம்தான் விஜய்: அமைச்சர் ரகுபதி

பாஜகவின் 'சி' டீம்தான் விஜய் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

DIN

பாஜகவின் 'சி' டீம்தான் விஜய் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மாநாடு என்பதை விட பிரம்மாண்டமான சினிமா ஷூட்டிங் என்றே சொல்லலாம். முதல்வர் முன்னெடுத்துச் செல்லும் கொள்கையை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது.

திமுகவை தாக்கி பேசினால் மக்கள் மத்தியில் சென்று சேர முடியும் என்பதால் பேசுகின்றனர்.

கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளனர். தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தபின் கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பேசட்டும்.

அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கவே அதிமுகவை பற்றி விஜய் எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் அரசுப் பேருந்தில் தீவிபத்து: 2 பயணிகள் காயம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக (கொள்கை பிரகடனம்) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய விஜய், பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்' என்று கூறினார்.

அதேவேளையில் இந்த மண்ணின் இரு கண்களான திராவிடம், தமிழ் தேசியத்தை பிரித்துப் பார்க்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT