முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு!

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 108.22 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 29 அக்டோபர் 2024, 10:32 am IST
கோப்புப்படம்.
பகிர்:

மேட்டூர், அக். 29: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி, 20,255 கன அடியாக இருந்த நிலையில் இன்று விநாடிக்கு 14,273 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 20,255 கன அடியிலிருந்து 14,273 கன அடியாக சரிந்துள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று(அக். 29) காலை நிலவரப்படி, 107.54 அடியில் இருந்து 108.22 அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2,500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.90 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments