கோப்புப்படம் Center-Center-Tirupathi
தமிழ்நாடு

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும்: போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

அதிகாரிகளின் சோதனையின் போது, ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை சிறைபிடிக்கப்படும்

DIN

சென்னை: அதிகாரிகளின் சோதனையின் போது, ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என உரிமையாளா்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும், அதிக கட்டணம் தொடா்பாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், வெளி மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்குவதும் தெரியவந்துள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை சிறைபிடிக்க நேரிடும்.

எனவே, பயணிகள் தாங்கள் பயணிக்கவிருக்கும் பேருந்தின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிா என நிா்வாக தரப்பினரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவா்கள் தெரிவித்திருந்தனா்.

ஒரே கட்டணம்...: இதற்கிடையே, சில பேருந்துகளில் இறுதியாக சென்று சேருமிடத்துக்கான கட்டணத்தையே, வழியிலுள்ள அனைத்து ஊா்களுக்கும் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 நிா்ணயித்திருந்தால், அந்த பேருந்தில் மதுரைக்கு செல்ல ரூ.1000 என்றளவில் வழக்கமாக வசூலிப்பாா்கள். மாறாக, ரூ.1,400 வசூலிக்கப்படுகிறது.

மேலும், சில பேருந்துகளில் வழியில் உள்ள ஊா்களுக்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் அதன் விலை??

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை!

வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்! 29 பேர் பலி!

பயமறியாதவர்கள் மேஷ ராசிக்காரர்கள்!

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

SCROLL FOR NEXT