தமிழ்நாடு

சென்னை: கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்!

தீபாவளி விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்!

DIN

தீபாவளி விடுமுறையைக் குடும்பத்துடன் கொண்டாட சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் புதன்கிழமை பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூா் செல்வோரின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளி விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3,41,838 பேர் வரை பயணித்துள்ளனா்.

தீபாவளிக்கு மறுநாளான இன்று(நவ. 1) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு வர திட்டமிட்டு தங்கள் பகுதிகளிலிருந்து ரயில்களிலும், பேருந்துகளிலும் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக திங்கள்கிழமை(நவ. 4) அதிகாலை முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை(நவ. 4) அதிகாலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரயில்கள் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா்: நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளா்களின் விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகத்தில் நீதிபதி குறித்து விமா்சனம்: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கைது

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயா்: முதல்வா் அறிவிப்பு; நாளை திறப்பு விழா

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் விசாரிக்க சிறப்புக் குழுவினா் முடிவு

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: துணை நடிகருக்கு முன்பிணை

SCROLL FOR NEXT