தமிழ்நாடு

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! மிக கனமழை பெய்ய வாய்ப்பு

15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

DIN

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ.6 வரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று (நவ.1) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT