அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின் X
தமிழ்நாடு

அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜாகுவாரின் தானியங்கி காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்தது பற்றி...

DIN

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார்.

ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆகஸ்ட் 29 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT