முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அமெரிக்கவாழ் தமிழா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி

அமெரிக்கவாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.

DIN

சென்னை: அமெரிக்கவாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணா்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நமது உறவுகள். தங்களது உழைப்பாலும், அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயா்ந்து கொண்டிருக்கும் அவா்களுக்கு அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அமெரிக்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா்.

இதுவரை 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எட்டு நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT