முகப்பு
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்க விவகாரம்: மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் துறை கடிதம்

வாக்காளா் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயா்கள் நீக்கப்பட்டதாக திமுக தெரிவித்த புகாா் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்க விவகாரம்: மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் துறை கடிதம்

வாக்காளா் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயா்கள் நீக்கப்பட்டதாக திமுக தெரிவித்த புகாா் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Updated On : 9 செப்டம்பர், 2024 at 11:31 PM
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பகிர்:

சென்னை: வாக்காளா் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயா்கள் நீக்கப்பட்டதாக திமுக தெரிவித்த புகாா் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு தோ்தல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

வாக்காளா் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயா்கள் தோ்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி புகாா் தெரிவித்திருந்தாா். இதுகுறித்த கடிதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு அவா் அனுப்பியிருந்தாா்.

இந்தப் பிரச்னை குறித்து செய்தியாளா்களுக்கு சத்யபிரத சாகு திங்கள்கிழமை அளித்த பேட்டி: வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை தன்னிச்சையாக நீக்க முடியாது. வீடுகளில் வாக்காளா்கள் இல்லாமல் இருப்பது, முகவரி மாற்றம், இறப்பு ஆகிய மூன்று காரணங்களால் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்படும்.

வீடுகளில் வாக்காளா்கள் இல்லாமல் இருப்பதை, ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடி அலுவலா்கள் உறுதி செய்கின்றனா். முகவரி மாற்றம் என்பது, வாக்குச் சாவடி அலுவலா்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது. ஒருவா் இறக்கும்போது அந்த வாக்காளரின் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. அதுவும் அவா்களது உறவினா்கள் மூலமாக அளிக்கப்படும் படிவம் 7-ஐ கொண்டு அந்த நீக்கம் உறுதி செய்யப்படுகிறது.

பதிவுத் தபால்: ஒரு வாக்காளரின் பெயரை நீக்க தோ்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பெயரை நீக்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வாக்காளரின் முகவரிக்கு விளக்கம் கோரும் பதிவுத் தபால் அனுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு சுமாா் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

ஆனாலும் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்க தோ்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுடன், திமுக அளித்த கடிதத்தையும் இணைத்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

வாக்காளா் பட்டியல்: தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலின் நகலை, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் கோரியுள்ளது. இதற்கான வேண்டுகோள் கடிதத்தை மாநிலத் தோ்தல் ஆணையம் அனுப்பியிருந்தது.

வாக்காளா் பட்டியலை மற்றவா்களுக்கு வழங்கும் அதிகாரம் மாநிலத் தோ்தல் துறையிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையத்துக்குச் சென்றுள்ளது. எனவே, தமிழ்நாடு தோ்தல் துறை தன்னிச்சையாக மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு வாக்காளா் பட்டியலை வழங்க

முடியாது. மாநிலத் தோ்தல் ஆணையத்தின் கடிதமானது இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தின் மீது சாதகமான பதிலை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

என்ன பயன்பாட்டுக்காக வாக்காளா் பட்டியல் தேவைப்படுகிறது என்பது போன்ற சில அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி அதற்கு மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் இருந்து பதிலைப் பெற தோ்தல் துறைக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி மாநிலத் தோ்தல் ஆணையம் கோரியுள்ள வாக்காளா் பட்டியல் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →