மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இரவு நேரங்களில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிக்கள், வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு மட்டுமின்றி மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், காலை 6.55 மணிக்கு முதல் விமானமும் இரவு 9.25-க்கு கடைசி விமானமும் இயக்கப்பட்டு வருகின்றது. இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த தமிழகத்தின் தென்மாவட்ட எம்பிக்கள், மதுரை விமான நிலையத்தை முறைப்படி சர்வதேச நிலையமாக அறிவிக்கவும், இரவு நேரம் போக்குவரத்தை தொடங்கவும் ஆவணம் செய்ய கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, மதுரை வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் சுரேஷை செப்.1-ஆம் தேதி நேரில் சந்தித்த மதுரை வர்த்தக சங்கத்தினர் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணைம் அனுமதி அளித்துள்ளது.
விமான நிறுவனங்களுக்கு அழைப்பு
மதுரை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்காக இண்டிக்கோ, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களிடம் இரவு நேர விமானங்களின் நேரப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.