சுங்கச் சாவடி (கோப்பிலிருந்து) Center-Center-Madurai
தமிழ்நாடு

ஃபாஸ்டேக்கில் பணம் இல்லை: அரசுப் பேருந்துகளுக்கே இந்த நிலையா? குமுறும் பயணிகள்!

ஃபாஸ்டேக்கில் பணம் இல்லை என்று கூறி மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன.

DIN

மதுரை: ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாததால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை, சுங்கச் சாவடியைக் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்காமல், பேருந்துகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச் சாவடியை இன்று காலை கடக்க முயன்ற அரசுப் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி சுங்கச் சாவடி ஊழியர்கள் பிரச்னை செய்தனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பேருந்துகளை கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

சுமார் 10க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள், சுங்கச் சாவடியை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பல பேருந்துகள் புறப்பட்ட இடத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசுப் பேருந்துக்கே இந்த நிலையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

பேருந்துகள், சுங்கச் சாவடியிலிருந்து பின்னோக்கி செலுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டு வருவதால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT