முகப்பு
தமிழ்நாடு

மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: சென்னையில் பல இடங்களில் மின் தடை

மணலியிலுள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சென்னை முழுவதும் வியாழக்கிழமை இரவு பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:13 PM
கோப்புப் படம்
பகிர்:

மணலியிலுள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சென்னை முழுவதும் வியாழக்கிழமை இரவு பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினா் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இரவில் மின்தடை: இதனால், வட சென்னை, தென் மற்றும் மத்திய சென்னைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக மணலி, தண்டாயாா் பேட்டை, திருவொற்றியூா், ராயபுரம், காசிமேடு, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூா், மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகா் , கோடம்பாக்கம், கொளத்தூா், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தியாகராய நகா், பெரம்பூா், சூளைமேடு, மயிலாப்பூா், கோட்டூா்புரம், மற்றும் திருவான்மியூா் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

ஏற்கெனவே, வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் சூழலில் இந்த மின்தடை பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தீவிபத்து ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், இதை சரிசெய்யும் பணியில் மின் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் சீராகும் எனவும் மின்வாரிய தலைவா் ராஜேஸ் லக்கானி தெரிவித்தாா். அதன்படி சில மணி நேரங்களில் படிப்படியாக மின்விநியோகம் சீரடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →