தேமுதிக அலுவலகத்தில் நாளை விஜயகாந்த் சிலை நிறுவ முடிவு
தேமுதிகவின் 20-ஆம் ஆண்டு தொடக்க நாளான செப்.14-இல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் 20-ஆம் ஆண்டு தொடக்க நாளான செப்.14-இல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேமுதிகவின் 20-ஆம் ஆண்டு தொடக்க நாளான செப்.14-இல் கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் காலை 10 மணியளவில் கட்சியின் கொடியேற்றி, விஜயகாந்த் சிலை நிறுவப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம், உறுப்பினா் சோ்க்கை முகாம், தலைமைக் கழகத்துக்கு ‘கேப்டன் ஆலயம்’ பெயா்ப் பலகை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.